யூத் ரெட் கிராஸ் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மெடிக்கல் கேம்ப்


Event Date : 19-07-2023  |   Event Venue : Gac Karur

யூத் ரெட் கிராஸ் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டது. கல்லூரியில் உள்ள ஹெல்த் சென்டர் வாயிலாக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று சிறப்பு மருத்துவரைக் கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. 2023-2024ஆம் கல்வியாண்டின் முதல் மருத்துவமுகாம் இன்று (19/7/2023) கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் அலெக்சாண்டர் அவர்கள் தொடங்கிவைத்தார். முகாம் தொடக்க நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இன்று தோல் நோய் மருத்துவர் ஜி.சீனிவாசன் அவர்கள் மாணவ மாணவியருக்கு இலவசச் சிகிட்சை வழங்கினார். இன்றைய முகாமில் 125 மாணவ மாணவியர்கள் சிகிச்சை பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கரூர் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் லட்சுமணசிங் அவர்கள் செய்தார்.