Events
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Event Date : 26-07-2025 | Event Venue : GAC College, Karur | Department : PLACEMENT CELL
கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இன்று (26-07-2025-சனிக்கிழமை) நமது அரசு கலைக் கல்லூரி (த), கரூர் -5.-ல் நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி ஆணையினை வழங்கி வாழ்த்தினர்.
இன்றைய நிகழ்வில் சுமார் 150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்தனர். நிகழ்வில் சுமார் 2000 இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினருடன் இணைந்து நமது கல்லூரியின் முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ மாணவர்கள் செய்திருந்தனர்.
மேலும் நமது கல்லூரியின் மாணவர்கள் சுமார் 300 பேர் இதில் கலந்து கொண்டு, சுமார் 50 மாணவர்கள் பணி ஆணையினை பெற்றனர். அவர்களை கல்லூரியின் நிர்வாகம் சார்பில் வாழ்த்துகிறோம். விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து துறைத்தலைவர்கள், இருபால் பேராசிரியர்கள், NSS, NCC உள்ளிட்ட தன்னார்வ மாணவர்கள், அலுவலகப் பணியாளர்ள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்