பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


Event Date : 31-07-2025  |   Event Venue : GAC College, Karur  |  Department : NATIONAL SERVICE SCHEME

இன்று நமது கல்லூரியில், மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் "பெண்கள் அதிகாரமளித்தல், பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி" மிகவும் பயனுள்ளதாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தலைமை அழைப்பாளராக கரூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் திருமதி P. செல்வி அவர்கள் கலந்து கொண்டு, பெண்களின் சமூக upliftment மற்றும் உரிமைகள் குறித்தும், இன்றைய நவீன சூழலில் பெண்கள் எதிர்கொள்வதற்குரிய சவால்கள் குறித்து விளக்கமும் ஊக்கமும் வழங்கினார்.

தொடர்ந்து, திருமதி T. பரிமளா, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், இணையம் மற்றும் மொபைல் போன்கள் வாயிலாக நடைபெறும் சைபர் குற்றங்கள், மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விதிகள், மற்றும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அதன்பின், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி A. S. குமாரி அவர்கள், மாணவிகள் கல்வி பயணத்தில் எதிர்கொள்ளும் உணர்ச்சி, சமூக மற்றும் மனநிலை சவால்கள் குறித்தும், அவற்றை வெற்றிகரமாக சமாளிக்கும் முறைகள் குறித்தும், ஆழமான பார்வையுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு மாணவியரிடம் ஊக்கம் ஏற்படுத்தினார்.

மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்று, அதில் இடம் பெற்ற உரைகளின் மூலம் பெரும் விழிப்புணர்வையும், பயன்களையும் பெற்றனர்.
இதில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன