ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம்


Event Date : 18-11-2023  |   Event Venue : Gac Karur

அரசு கலைக்கல்லூரி ( தன்னாட்சி) கரூர் 5.
ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம் 
    அரசு கலைக்கல்லூரி தான்தோன்றிமலையில் 18-11-2023 முதல் 24-11-2023 வரை ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்பு வருவதை தடுக்கும் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிப்பதையொட்டி, கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் S.அலெக்சாண்டர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இன்று 23-11-2023 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விலங்கியல் துறை K. பாபுநாத் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மருந்துகளை கையாளும் விதம், நோய் எதிர்ப்புத் திறன், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் சுகாதாரத்தையும் பேணுதல் போன்றவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இவ்விழாவிற்கு முனைவர் K.செந்தில்குமார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழா முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் R.காளீஸ்வரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதற்காக ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் K.செந்தில்குமார், முனைவர் காளீஸ்வரி, முனைவர் மாறன்,, முனைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பங்குபெற்றனர்.