Events
விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா
Event Date : 16-10-2024 | Event Venue : GAC College, Karur | Department : TAMIL
கரூர் பரமத்தி பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மத்திய விஜிலென்ஸ் ஆணையம் சார்பாக விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா நமது கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான விவாத மேடை நடைபெற்றது. இப் போட்டிக்கு ஆறு கல்லூரியில் இருந்து கல்லூரிக்கு இருவர் என்ற முறையில் 12 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் செ. அலெக்சாண்டர் அவர்கள் தலைமை தாங்கினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு ச. விஜயராஜன் அவர்கள் வரவேற்புரையாற்றினார் .விலங்கியல் துறை தலைவர் முனைவர் அ கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப் போட்டிக்கு தமிழ் துறை பேராசிரியர்கள் முனைவர் அர தர்மலிங்கன், முனைவர் ச கொடியரசு ,திரு ஆ. சுந்தரம் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து இப்போோட்டியினை நடத்தினார்கள்.
இறுதியாக பவர் கிரீட் கார்ப்பரேஷன் பொறியாளர் துணை மேலாளர் திரு குணசேகரன் அவர்கள் நன்றி உரையாற்றினார். இப் போட்டியில் நம் கல்லூரி வணிகவியல் துறை மாணவர் சேது விநாயகம் சிறந்த பேச்சாளருக்கான முதல் பரிசையும் கரூர் வேளாளர் கல்லூரி மாணவி சிறந்த பேச்சாளருக்கான இரண்டாவது பரிசினையும் பெற்றுள்ளார்கள். பரிசினை பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் துறைத் தலைவர்கள் இருபால் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.