Events
மாநில அளவிலான குறள் வினாடி வினாப் போட்டி
Event Date : 07-12-2025 | Event Venue : GAC College, Karur | Department : TAMIL
வணக்கம்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 07/12/2025 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குறள் வினாடி வினாப் போட்டியில் கரூர் மாவட்டத்தின் சார்பில் நம் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவர்களான இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி லீலா, முதுகலை முதலாம் ஆண்டு மாணவி கோவர்த்தினி, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் லீலா அணி முதல் இடத்தையும், கோவர்த்தினி அணி இரண்டாம் இடத்தையும் பெற்று நம் கல்லூரிக்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர்